கூகுள் காட்டும் பூமி வேடிக்கை
கூகுள் சத்தமே இல்லாமல் தனது, கூகுள் எர்த்வியூ சேவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களை சேர்த்திருக்கிறது. இந்த படங்களை நீங்கள் பார்த்து ரசிக்கலாம். தேவை எனில் டவுண்லோடும் செய்து கொள்ளலாம்.
இணைய ஜாம்பவானான கூகுள், தேடல் தவிர நூற்றுக்கணக்கான துணை சேவைகளை வழங்கி வருகிறது. அவற்றில் கூகுள் எர்த் சேவையும் ஒன்று. பலரும் நன்கறிந்த கூகுள் மேப்ஸ் வரைபடத்தின் சகோதர சேவை இது. பறவை பார்வை என்பார்களே அதேபோல, இந்த சேவை மூலம் பூமியில் தெரியும் காட்சிகளை செயற்கைகோள் படங்களாக 3-டியில் பார்க்கலாம். டெஸ்க்டாப் அல்லது ஸ்மார்ட்போனில் இந்த சேவையை டவுண்லோடு செய்தும் கொள்ளலாம்.
பூமியை விண்ணில் இருந்து பார்க்கும் போது அற்புதமாக தோன்றும் நில அமைப்பு காட்சிகளை கூகுள் எர்த்வியூ தளம் மூலம் எளிதாக பார்க்கவும் கூகுள் வழி செய்கிறது. இதில் தான் இப்போது புதிதாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூமி படங்களை சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை பார்த்து ரசிப்பதுடன், வால்பேப்பராகவும் தரவிறக்கி கொள்ளலாம்.
கூகுள் எர்த்வியூவை காண: https://earthview.withgoogle.com/