உங்களுக்கான முகப்பு பக்கம்
இணையத்தில் துவக்க பக்கம் ( ஸ்டார்ட் பேஜ்) எனும் கருத்தாக்கம் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஒருவர் அடிக்கடி பயன்படுத்தும் இணையதளங்கள் அனைத்தும் ஒரே பக்கத்தில் தோன்றும் வசதியாக இது அமைகிறது. பிரவுசரில் உங்களுக்கான முதல் பக்கம் என்றும் இதை கருதலாம்.
உங்கள் அபிமான தளங்களை எல்லாம் இந்த முதல் பக்கத்தில் வைத்துக்கொண்டால், அதன் பிறகு இந்த பக்கத்தில் இருந்து அந்த தளங்களுக்கு செல்லலாம். தனியே ஒவ்வொரு தளமாக செல்ல வேண்டியதில்லை.
முதல் பக்கத்தை ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட தன்மைக்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்.
இப்படி உங்களுக்கான முதல் பக்கத்தை அமைத்துக்கொள்ள விரும்பினால்,மைபேவ்.ஸ் (https://www.myfav.es/ ) தளம் இதற்கு கைகொடுக்கிறது. இந்த தளத்தில் பதிவு செய்து கொண்டால், நீங்கள் அடிக்கடி விஜயம் செய்யும் இணையதளங்களை எல்லாம் அதில் பட்டியலிட்டு, அந்த தளங்களுக்கான முதல் பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம். இந்த முதல் பக்கத்திற்கான பிரத்யேக இணைய முகவரியும் உருவாக்கி அளிக்கப்படுவதால், அந்த முகவரி கொண்டு எந்த சாதனத்தில் இருந்தும் உங்கள் அபிமான தளங்களை அணுகலாம்.