மழையே. மழையே இணையதளங்கள்
இன்று மழையும், மழை சார்ந்த இணையதளங்கள் சிலவற்றை பார்க்கலாம்:
ரெயின்பார்மீ (http://rainfor.me/ ) – உங்களுக்காக மழை பெய்விக்கும் இணையதளம். மழை பெய்வது போன்ற நவீன ஓவிய பின்னணியில் அமைந்துள்ள இந்த தளத்தில் உள்ள மைக், உங்களுக்காக மழை பெய்யும் ஒலியை அளிக்கிறது.
-
ரெயின் மூட் (https://rainymood.com/) மழை ஒலி பின்னணியில் ஒலிக்க, மழை காட்சியை ரசித்த படி மழை மனநிலை பெற உதவுகிறது. ஸ்மார்ட்போன்களில் செயலி வடிவிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மனதை லேசாக்கி கொள்ள அல்லது கவனச்சிதறலை தடுத்து ஒருமுக நிலை பெற என இந்த தளத்தை பயன்படுத்தலாம்.
-
ரெயின்ரூம் (https://rainroom.herokuapp.com/) தளம், கொஞ்சம் வித்தியாசமானது. யூடியூப்பில் பார்க்க கூடிய மழைக்காட்சிகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலாக வழங்குகிறது. இதில் உள்ள பட்டியல் மீது கர்சரை வைத்தால், மழைக்காட்சியின் முன்னோட்டத்தை பார்க்கலாம். கிளிக் செய்தால் தொடர்புடைய யூடியூப் வீடியோவில் மழையில் நனையலாம்.
-
மழை டியூப் சானல்
மேலே உள்ள இணையதளங்கள், உங்களை மழை மனநிலையில் தள்ளி, நம்மூர் கோடை வெய்யிலுக்கு நடுவே, மழைக்காக ஏங்க வைத்திருந்தால், தி ரிலேக்ஸ்டு கெய் (https://www.youtube.com/user/therelaxedguy/videos?app=desktop) யூடியூப் சானலுக்குள் எட்டிப்பாருங்கள்: டெஸ்க்டாப்பில் இருந்தபடியே, கொட்டும் மழையில் இடைவிடாமல் நனைந்து கொண்டிருக்கலாம். மனிதர் மழையை படம் பிடிப்பதையே தொழிலாக வைத்துக்கொண்டிருக்கிறார் போலும். உலகம் முழுவதும் பயணித்து மழை சார்ந்த இயற்கை காட்சிகளை வீடியோவாக்கி, தனது யூடியூப் சானலில் பதிவேற்றியிருக்கிறார். ஒரு வீடியோ 10 மணி நேர மழைக்காட்சி என்கிறது. இன்னொரு வீடியோ 24 மணி நேர மழை என்கிறது. நதியில் மழை, குடை மீது விழும் மழை என இந்த சானலில் விதவிதமான மழையில் லயிக்க வைக்கிறது.
மன அமைதி தேவை எனில், அவசியம் புக்மார்க் செய்து கொள்ளுங்கள். யூடியூப் என்றாலே காமெடி காலாட்டக்கள் என நினைத்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்!
-
மேலும் சில வித்தியாசமான யூடியூப் சானல்கள்:
தூக்கம் வருவதற்கான மழை ஒலி:
தூக்கம் வர உதவும் இன்னொரு சானல்:
இயற்கையில் நனையுங்கள்: