பாடல்களை கண்டறிவதற்கான தேடியந்திரம்
மேற்கத்திய இசையில் ஆர்வம் கொண்ட இளம் அல்லது வளரும் பாடகர்களுக்கான தேடியந்திரம் என ’சிங்கிங்கேரட்ஸ்’ (https://singingcarrots.com/home ) இணையதளத்தை குறிப்பிடலாம். பாடகர்கள் தங்கள் குரல் வளத்திற்கு ஏற்ற பாடல்களை தேர்வு செய்து கொள்ள இந்த தளம் வழி செய்கிறது.
சங்கீதம் என்றாலே சாதகம் தானே முக்கியம். எனவே வளரும் பாடர்கள் சாதகத்தில் ஈடுபடுவது நல்லது. ஆனால் பாடல்களை தேர்வு செய்யும் போது, அது தங்களால் பாடக்கூடியதாக இருப்பது நல்லது. அதாவது, தங்களது குரல் அமைப்பிற்கு ஏற்ற பாடல்களை தேர்வு செய்து கொள்வது நல்லது.
இப்படி, வோகல் ரேஞ்ச் எனப்படும், குரல் அமைப்பிற்கு ஏற்ற பாடல்களை தேடி கண்டறிய இந்த தளம் வழி செய்கிறது. பாடகர்களுக்கு தங்கள் குரல் அமைப்பு தெரியவில்லை எனில் அதையும் இந்த தளத்திலேயே கண்டறியலாம். அதே போல பிரபல பாடகர்களின் குரல் அமைப்பையும் தெரிந்து கொள்ளலாம்.
இசையில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஆழமான தகவல்களை அளிக்க கூடியதாக இந்த தேடியந்திரம் இருக்கிறது.
-