விண்ணில் உலாவுவது யார்? பதில் சொல்லும் இணைதளம்
விக்டர் குளோவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? குளோவர் இப்போது மைக்கேல் ஹாப்கின்சுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார். ஷனான் வாக்கரும், இன்னும் சிலரும் அவருடன் இருக்கின்றனர்.
யார் இவர்கள்? என்பது, எங்கே சுற்றிக்கொண்டிருக்கின்றனர் என்பதை சொன்னால் தெரிந்து விடும்.
இவர்கள் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். ஆம், ஆய்வு பணிக்காக விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மைத்தில் இப்போது வசித்து வருகிறார்கள்.
இவர்களில், குளோவரும், ஹாப்கின்சும் 137 நாட்களாக அங்கே முகாமிட்டுள்ளனர். இந்த விஷயத்தில், கேத் ரூபின்ஸ் மற்றும் செர்ஜி ரைஸ்கோவ் மற்றும் செர்ஜி ஷெர்கோவ் சீனியர்கள். 169 நாட்களாக அங்கே தங்கியிருக்கின்றனர். நோகுச்சி மற்றும் ஹனான் வாக்கரும் அங்கே 137 நாட்களாக இருக்கின்றனர்.
இந்த விவரங்கள் எல்லாம் தெரிய வேண்டும் என்றால், இப்போது விண்வெளியில் எத்தனை பேர் இருக்கின்றனர் எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் இதே பெயரில் நீளமான முகவரி கொண்ட https://www.howmanypeopleareinspacerightnow.com/ இணையதளத்திற்கு விஜயம் செய்தால் போதும்.
விண்வெளி ஆய்வு மையத்தில் தற்போது தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களின் எண்ணிக்கையை இக்கேள்விக்கான பதிலாக முகப்பு பக்கத்தில் அளிக்கும் இந்த தளம், அந்த வீரர்களின் பெயர்கள் உள்ளிட்ட தகவல்களையும் சுருக்கமாக அளிக்கிறது.
அருமையான ஒரு பக்க இணையதளங்களில் முன்னிலையில் வரக்கூடிய இணையதளம் இது.
ஒரு பக்க அல்லது ஒற்றை பக்க இணையதளங்கள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.