லோஃபை இசை தெரியுமா?
வாழ்க்கையில் எல்லாமே உயர் தரத்தில் தான் இருக்க வேண்டுமா? குறைந்த தளம் என்றால் என்ன இழுக்கா? எல்லாம் சரி தரம் என்றால் என்ன? அதற்கான அளவுகோள்கள் எவை?
இப்போது நாம் பார்க்க இருக்கும் இணையதளத்தை புரிந்து கொள்ள இந்த கேள்விகள் அவசியம். ஏனெனில், ’லோஃபை’ என சொல்லப்படும் புதுவிதமான இசையை கேட்டு அமைதியுற இந்த தளம் வழி செய்கிறது. தளத்தின் முகவரி:
இந்த அறிமுகத்தில் கேட்டு ரசிப்பதற்கு என்பதற்கு பதில் அமைதியுற என பயன்படுத்துப்பட்டிருப்பதை கவனியுங்கள். அது தான் இந்த தளம் மற்றும் அதன் பின்னே உள்ள லோஃபை இசையின் தன்மை மற்றும் நோக்கம்.
வை-பை போல அமைந்திருக்கும் லோஃபை எனும் சொல்லை குறைந்த குறைந்த துல்லியத்திலான இசை எனும் பொருளில் இசை உலகில் பயன்படுத்துகின்றனர். வழக்கமாக அதிகம் நாடப்படும் ஹை பிடிலிட்டி எனும் அதி துல்லியமான இசைக்கு மாறாக இந்த லோபை இசையை குறிப்பிடுகின்றனர்.
அதாவது, ஒலிப்பதிவில் குறைகளை கொண்ட இசை என புரிந்து கொள்ளலாம். அல்லது இசை உருவாக்கத்தின் போது உண்டான பிழைகளையும், பிசிறுகளையும் நீக்காமல் அப்படியே மூல இசையை தொழில்நுட்ப நோக்கில் மெருகேற்றாமல் பயன்படுத்துவது என்றும் புரிந்து கொள்ளலாம்.
லோபை இசையை குறைந்த தரத்திலானது என மோலோட்டமாக குறிப்பிடலாம் என்றாலும், இசையிலோ அதன் உருவாக்கத்திலோ தரக்குறைவு கிடையாது. மாறாக அதன் ஒலிப்பதிவில் துல்லியத்தை நாடாமல் இருப்பதாக கருதலாம்.
முழுமை, பிசிறற்ற தன்மை என பார்க்காமல், இசைப்பதிவில் சின்னதாக இருக்கும் குறைகளை இயல்பாக கேட்டு ரசிப்பதை இந்த வகை இசை அடிப்படையாக கொண்டிருக்கிறது. 1990 களுக்கு பிறகு இந்த வசை இசை பிரபலமாகத்துவங்கியிருக்கிறது.
இசைமயமாக இன்னும் விவரித்து எழுதலாம் என்றாலும், லோஃபை இசை என்பது பெரும்பாலும், பாடகர்கள் குரல் இல்லாமல், மெட்டொலி அல்லது இசை கருவிகள் கொண்டு மட்டுமே உருவாக்கப்படுவதாக கொள்ளலாம். இந்த காரணத்தினால் இந்த இசையை கேட்கும் போது, மனம் அமைதி கொள்வதாக கருதப்படுகிறது.
பலரும், கவன குவிப்பை பெற லோஃபை இசையை பின்னணியில் ஒலிக்க விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதே காரணத்திற்காக உளவியல் வல்லுனர்களும், நோயாளிகள் மன அமைதி பெற இந்த வகை இசையை பயன்படுத்துவதாக அறிய முடிகிறது.
லோஃபை இசைய வழங்கும் யூடியூப் சேனல்கள், ஸ்பாட்டிபை பிலேலிஸ்ட்கள் உள்ளன. இதற்கென பிரத்யேக இணையதளங்களும் உள்ளன. இவற்றில் ஒன்று தான் மேலே குறிப்பிட்ட இணையதளம்.-
இசையின் தன்மைக்கேற்ப அதிக இடையூறு இல்லாத மன அமைதி அளிக்கும் இடைமுகத்தை கொண்ட இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் இசை சாதனம் இருக்கிறது. அதில் உள்ள விசைகளை கிளிக் செய்தால் வரிசையாக மன அமைதி அளிக்கும் லோஃபை இசையை கேட்கலாம். இசையை முன்னும் பின்னும் நகர்த்தால் என்பதோடு, மொத்த இசை பட்டியலையும் பார்க்கலாம். பிடித்த இசையை பகிரலாம். புதிய இசையை சேர்க்கலாம்.
அருமையான தளம், பயன்படுத்திப்பார்த்து சொல்லுங்கள்,