நீங்களும் நியூட்டனாகலாம்- ஜூம் சந்திப்புகளில் உரையாற்றலாம்!
கொரோனா பொது முடக்க காலத்தில், ஜூம் வீடியோ சந்திப்புகள் தவிர்க்க இயலாததாகி இருக்கலாம், ஆனால் அலுப்பூட்டாதவையாக இருக்கின்றனவா ? என்பது முக்கியமான கேள்வி. அதற்காக வீடியோ சந்திப்பு வசதியை குறை சொல்வதாக நினைத்து, ’என்ன இருந்தாலும் நேர் சந்திப்பு போல வருமா’ எனும் வாதத்தை கொண்டு வர வேண்டாம்.
ஏனெனில், இங்கு நாம் பார்க்கப்போவது வீடியோ சந்திப்பு சேவைகளின் குறைபாடுகளை அல்ல: மாறாக, தொடர் வீடியோ சந்திப்புகளில் ஈடுபடும் போது இடையே ஏற்படக்கூடிய அலுப்பு அல்லது களைப்பு போன்ற அம்சங்களை மட்டுமே கவனத்தில் கொள்கிறோம்.
இந்த அம்சங்களை சுட்டிக்காட்டுவது கூட, இவற்றுக்கும் தீர்வாக புதுமையான மென்பொருள் சேவைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்த்துவதற்காக தான். அந்த வகையில், ஜூம் சந்திப்புகளின் களைப்பை களைந்து, அவற்றை சுவாரஸ்யமாக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஷன்காமிரா ( https://xpressioncamera.com/) எனும் சேவை பற்றி பார்க்கலாம்.
மெய்நிகர் காமிரா செயலி என வர்ணிக்கப்படும் எக்ஸ்பிரஷன் காமிரா ஜூம் கூட்டங்களில் பங்கேற்கும் போது, உங்கள் தோற்றத்தை மாற்றிக்கொண்டு, நீங்கள் விரும்பும் நபராக திரையில் தோன்ற வழி செய்கிறது.
வீடியோ சந்திப்புகளில் ஈடுபடும் போது, இந்த செயலியை இயக்கி, பயனாளிகள் தங்களை நியூட்டனாக அல்லது, ஐன்ஸ்டீனாக தோன்றச்செய்யலாம். விரும்பினால், ஸ்டீவ் ஜாப்ஸ் அல்லது எலன் மஸ்காகவும் மாற்றிக்கொள்ளலாம். இதற்கு பயனாளிகள் செய்ய வேண்டியதெல்லாம் அதன் முன் கொஞ்சம் போஸ் கொடுக்க வேண்டியது தான்.
வீடியோ பதிவில் உள்ள பயனாளிகள் முக அசைவுகளை கொண்டு, இந்த செயலி அவர்கள் விரும்பும் வேறு ஒரு நபரின் முகத்துடன் பொருத்தி, இவரை அவர் போலவே தோன்றச்செய்கிறது. இவ்விதமாக, ஒருவர் நியூட்டன் போல தோன்றலாம்.
ஏற்கனவே இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய முகமாற்று செயலியான பேஸ் ஆப் போலவே இந்த செயலியும் செயல்படுகிறது. ஒருவரின் முக அசைவுகளை குறிப்பெடுத்து செயற்கை நுண்ணறிவின் மூலம், அந்த குறிப்புகளை வேறு ஒருவர் முகத்தில் பொருத்தி, தோற்றத்தையே மாற்றிக்காட்டுகிறது.
இவ்விதமாக, வீடியோ சந்திப்பு பயனாளிகள் தங்கள் முகத்தை வேறு ஒருவரது முகமாக மாற்றிக்கொண்டு உரையாடலில் ஈடுபடலாம். பிரபலங்களின் உருவங்களை பயன்படுத்துவதோடு, பயனாளிகள் தங்கள் சிறு வயது தோற்றத்தையும் கூட பயன்படுத்தி தங்களை குழந்தை பெரியவராக மாற்றிக்கொள்ளலாம்.
சாதாரண ஸ்மார்ட்போனில் கூட சிறப்பாக செயல்படுவதாக சொல்லப்படும் இந்த செயலியை பயன்படுத்திப்பாருங்கள், உங்கள் வீடியோ சந்திப்புகள் மேம்படட்டும். !
வீடியோ சந்திப்புகளில் ஈடுபடும் போது, தொடர்ந்து முகங்களையே பார்த்துக்கொண்டிருக்க நேர்வது அலுப்பூட்டுவதாக உணரும் போது, இந்த செயலியை இயக்கி