இமெயிலில் தேடி வரும் தினசரி ஊக்கம்!
தினம் ஒரு பரிசு உங்களை தேடி வருவது போல, ஊக்கம் அளிக்க கூடிய மிகச்சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்து, நாள்தோறும் இமெயிலில் அனுப்பி வைக்கிறது ஒன் டெய்லி நக்கெட் (https://onedailynugget.com/ ) இணையதளம்.
தினம் ஒரு தகவல் எனும் கருத்தாக்கம், இணையதள உள்ளடக்கத்திற்கும் சரி, இமெயில் வழி சேவைக்குக்கு சரி பொருத்தமானது என்றாலும், ஒன் டெய்லி நக்கெட் இணையதளம், இந்த வழக்கமான உத்தியை, கட்டுரை தேர்வு மூலம் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்கிறது.
தனிநபர்கள் மேம்பாட்டிற்கு வழிகாட்டக்கூடிய ஊக்கம் தரும் கட்டுரைகளை இணையத்தில் வலைவீசி தேடி எடுத்து, அதன் சாரம்சத்தை சுருக்கமாக அறிமுகம் செய்கிறது. இந்த சி\று அறிமுகத்துடன் முழுக்கட்டுரைக்குமான இணைப்பும் கொடுக்கப்படுகிறது.
இணையத்தில் சுயமுன்னேற்ற கட்டுரைகளும், வழிகாட்டுதல் குறிப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன என்றாலும் அவற்றில் அலுப்பூட்டக்கூடிய தன்மை கொண்டவற்றை எல்லாம் விலக்கி விட்டு, வாசிக்கும் போது ஏதேனும் ஒரு வகையில் உற்சாகம் கொள்ள வைக்கும் புரிதலை அளிக்கும் அருமையான கட்டுரைகளை தேடி எடுத்து அளிப்பது இந்த தளத்தின் சிறப்பம்சமாக இருக்கிறது.
கட்டுரைகளி தளத்தின் முகப்பு பக்கத்திலும் பார்க்கலாம். பழைய கட்டுரைகளையும் பார்க்கலாம். ஒரு கட்டுரையில் இருந்து இன்னொரு கட்டுரைக்கு பொருத்தமான இணைப்புகளும் இருப்பதால் சங்கிலித்தொடர் போல கட்டுரைகளை வாசிக்கலாம்.
இணைய மலர் மின்மடல் போலவே, இமெயில் செய்தி மடல் தளம் என்பதால் நீங்களும் உறுப்பினராகலாம் என பரிந்துரைக்கிறேன்.