இலக்கண பிழைகளை நீக்க உதவும் இணையதளம்
செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இதன் பிரதிபலிப்பை செயற்கை நுண்ணறிவு சார்ந்த இணையதளங்களில் பார்க்கலாம். உதாரணம்- ஆங்கிலத்தில் இலக்கணப் பிழைகளை அகற்ற உதவும் சேவைகள். இந்த பிரிவில் கிராமர்லி தான் ராஜா என்றாலும், இப்போதைக்கு கம்போஸ்.ஏஐ தளத்தை பார்க்கலாம்.
இந்த தளம் ஆங்கிலம் தவிர பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் பிழை திருத்த மற்றும் இலக்கண பிழை சரி பார்ப்பு சேவைகளை வழங்குகிறது.
ஆங்கிலத்தை டைப் செய்த வாசகங்களை இந்த தளத்தில் சமர்பித்து, இலக்கண பிழைகளை திருத்திக்கொள்ளலாம்.
இந்த சேவைக்கான குரோம் பிரவுசர் நீட்டிப்பு சேவை இருப்பதால் அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இமெயில், வாட்ஸ் அப், ஸ்லேக், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சேவைகளில் எழுதி கருத்துகளை பகிரும் போது இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போது, கூகுள் டாக்சுடன் இணைக்கப்பட்ட வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.- https://www.compos.ai/
· அறிமுக நோக்கில் மட்டுமே இதை எழுதுகிறேன். இந்த சேவையை பயன்படுத்திப்பார்த்து அதன் தன்மையை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
· தமிழிலும் இது போன்ற வசதி தேவை என நீங்கள் உணர்ந்தால், வாணி பிழை திருத்தி சேவையை பயன்படுத்திப்பாருங்கள். தமிழ் மென்பொருள் பரப்பில் தீவிரமாக இயங்கி வரும் நீச்சல்காரனின் இன்னுமொரு படைப்பு இது: http://vaani.neechalkaran.com/
மேலும் விவரங்களுக்கு: https://tech.neechalkaran.com/2015/03/blog-post.html