தீர்வு தேட உதவும் இணையதளம்
உங்கள் பிரச்சனைக்கு நடைமுறை சார்ந்த தீர்வை மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறீர்களா?
உங்களால், மற்றவர்கள் சொல்லும் பிரச்சனைக்கு பயனுள்ள தீர்வை சொல்ல முடியும் என நம்புகிறீர்களா?
இந்த கேள்விகளுக்கான உங்கள் பதில் ஆம் என்றிருந்தாலும் சரி இல்லை என்றிருந்தாலும் சரி, பிரச்சனைகளுக்கு உரையாடல் மூலம் தீர்வு காண வழி காட்டும் ரேதர்.டூ (https://rather.do/ ) இணையதளத்தை நீங்கள் அறிமுகம் செய்து கொள்வது நல்லது.
ஆம், இந்த தளத்தில் நீங்கள் பிரச்சனை என கருதும் விஷயத்தை பகிர்ந்து கொண்டு அதற்கான தீர்வை கேட்கலாம். இப்படி உதவி கோருவதற்காக என்ரே தனி படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், உங்கள் பிரச்சனையின் பின்னணி, பிரச்சனையின் தன்மை மற்றும் இது தொடர்பாக நீங்கள் செய்துள்ளவற்றை தெரிவிக்கலாம்.
இப்படி பிரச்சனையை பதிவு செய்த பிறகு, இதற்கான இணைப்பை பெற்றுக்கொண்டு உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இணைப்பை பெறும் நண்பர்கள், இந்த பிரச்சனைக்கான தீர்வை பகிர்ந்து கொள்ளலாம்.
நண்பர்கள் தெரிவிக்கும் தீர்வுகள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றில் இருந்து பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான வழியை கண்டறியலாம். மனதில் உள்ள பிரச்சனையை நண்பர்களிடம் பேசி தீர்வு காண்பது போல, இந்த தளம் இணையம் வழியே பிரச்சனையை பகிர்ந்து கொண்டு தீர்வு காண வழி செய்கிறது.
பிரச்சனையை சமர்பிப்பதற்கான படிவம் போலவே, தீர்வுகளை அளிக்கவும் தனி படிவம் இருக்கிறது. நடைமுறை சார்ந்த செயல்படுத்தக்கூடிய வகையில் தீர்வை வழங்கும் வகையில் இந்த படிவம் அமைந்துள்ளது.
நமது பிரச்சனையை எப்படி பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது என தயக்கம் ஏற்படலாம். இந்த தளத்தில் பகிரப்படும் எந்த தகவலும் படிக்கப்படுவதில்லை மற்றும் 24 மணி நேரத்தில் டெலிட் செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, கேள்வி பதில் தளமாக குவோராவில் கேட்பது போல, ரெட்டிட் போன்ற தளங்களில் விவாதிப்பது போலவே இந்த தளம் அமைந்துள்ளது.
-