இப்படியும் புதிய மொழி கற்கலாம் வழிகாட்டும் இணையதளம்
பைலிங்குவல் ஜோக்ஸ் (https://bilingualjokes.com/# ) இணையதளம், நகைச்சுவை உணர்வு மூலம் புதிய மொழியை கற்றுக்கொள்ள தூண்டுகோளாக அமைகிறது. நகைச்சுவை துணுக்குகள் மூலம் இதை செய்கிறது.
இந்த தளத்தில் உள்ள நகைச்சுவை துணுக்குகளை புரிந்து கொள்ள நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் இன்னொரு மொழியும் தெரிந்திருக்க வேண்டும். தெரியாத மொழியில் உள்ள நுகைச்சுவை எப்படி புரிந்து கொள்வது என கேட்கலாம். இங்கு தான் தளத்தின் புத்திசாலித்தனமே அடங்கியிருக்கிறது. எப்படி என்றால், இந்த தளம் நகைச்சுவை துணுக்குகளை இரு மொழியில் கலந்து அளிக்கிறது.
இந்த தளத்தில் உள்ள துணுக்குகள் அனைத்தும், ஒரு மொழியில் மட்டுமே புரியும் வகையிலான நகைச்சுவை சொற்களை ஒருவர் அறிந்த இன்னொரு மொழியில் கலந்து அளிக்கப்பட்டுள்ளது. புதிய மொழியில் உள்ள சொற்கள் புரியாமல் போனாலும், அதற்கான விளக்கத்தை படிக்கும் போது நகைச்சுவையும் புரியும், புதிய பிற மொழி சொல்லும் அறிமுகமாகும்.
இப்போதைக்கு ஆங்கிலம், சீனம், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் இரு மொழி நகைச்சுவை துணுக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. விரிவான பட்டியல் என்று சொல்ல முடியாது. அதே போல முழுவீச்சில் புதிய மொழியை கற்றுக்கொள்ள உதவும் என்றும் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் இன்னொரு மொழியை கற்றுக்கொள்வதற்கான தூண்டுகோளாக அமையும்.
ஒவ்வொரு படியாக முன்னேறுவோம் என்பதை போல, ஒவ்வொரு சொல்லாக முன்னேறாலமே!
பயனாளிகள் விரும்பினால், புதிய இரு மொழி நகைச்சுவை துணுக்குகளை இந்த தளத்தில் சமர்பிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.
-