ஜூம் சந்திப்புகளுக்கான புக்மார்க்கிங் சேவை
இலக்கிய கூட்டங்கள் துவங்கி, கட்சி பொதுக்குழுக்கள் வரை எல்லாவிதமான நிகழ்ச்சிகளும் ஜூம் வழியே நடைபெறத் துவங்கிவிட்டன. இன்னொரு பக்கம் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளும் ஜூம் வழியே நடத்தப்படுகின்றன. இங்கே ஜூம் என குறிப்பிடும் போது பொதுவாக எல்லா விதமான வீடியோ சந்திப்பு சேவைகளையுமே மனதில் கொள்ள வேண்டும்.
கொரோனா பாதிப்புக்கு மத்தியில், வீடியோ வழி சந்திப்புகள் தவிர்க்க இயலதாததாகி இருக்கின்றன.
இப்படி வீடியோ சந்திப்புகள் புதிய இயல்பாகி இருக்கும் சூழலில், ஜூம் சந்திப்புகளுக்கான இணைப்புகளை ஒரே இடத்தில் சேமித்து வைப்பதற்கான புதிய சேவை ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது.
ஜூம் புக்மார்க்ஸ் எனப்படும் அந்த குரோம் நீட்டிப்பு சேவை, ஜூம் வீடியோ சந்திப்பு இணைப்புகளை ஒரே இடத்தில் குறித்து வைக்க வழி செய்கிறது. இதன் மூலம், சந்திப்புக்கு முன்னதாக இணைப்புகளை தேடி அலைய வேண்டாம். அவற்றை எளிதாக அடையாளம் காணலாம்.
மாணவர்கள் முதல் தொழில்முறை பணியாளர்கள் வரை பலத்தரப்பினருக்கும் பயன் அளிக்க கூடிய இந்த ஜூம் புக்மார்கிங் சேவையை ஸ்ரேயா இர்வின் எனும் மாணவி உருவாக்கியுள்ளார்.
பெயர் தான் ஜூம் புக்மார்க்கே த்தவிர, கூகுள் மீட் உள்ளிட்ட எல்லா வகையான வீடியோ சந்திப்பு சேவைகளுக்கான இணைப்புகளையும் இதில் சேமித்து நிர்வகிக்கலாம்.
இணைப்பு: https://chrome.google.com/webstore/detail/zoom-bookmarks