இந்த தளம் கொரோனா போர் படை
கொரோனா ஆர்மி (https://covid.army/ ) எனும் பெயரில் கொரோனா மருத்துவ தகவல் உதவி தளம் அமைக்கப்பட்டுள்ளது. மிக எளிதான வடிவமைப்பு கொண்ட இந்த தளத்தில், கொரோனா பாதிப்பை சமாளிக்கும் வகையில் டிவிட்டரில் வெளியாகி கொண்டிருக்கும் மருத்துவ உதவி தகவல்களை எளிதாக தேடலாம்.
இதன் முகப்பு பக்கத்தில் தகவல்களை தேடுவதற்கான தேடல் கட்டம் உள்ளது. தேடல் கட்டத்தின் கீழ் முக்கிய சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இந்த பட்டியலில் உள்ள நகரங்களில் ஒன்றை கிளிக் செய்தால் அல்லது குறிப்பிட்ட நகரை தேடல் கட்டத்தில் குறிப்பிட்டால், அந்த நகரம் தொடர்பாக டிவிட்டரில் பகிரப்படும் மருத்துவ உதவி தகவலகள் அவற்றுக்கான டிவிட்டர் இணைப்புடன் வலப்பக்கம் வரிசையாக தோன்றுகின்றன.
இந்த தகவல் பட்டியலில் இருந்து தேவையான தகவல்களை அணுகலாம்.
குறிப்பிட்ட ஒவ்வொரு நகருக்கும், அங்குள்ள கொரோனா மருந்து நிலவரம், மருத்துவமனை படுக்கை மற்றும் ஆக்சிஜன் நிலவரம், பிளாஸ்மா நிலவரம், உணவு வசதி உள்ளிட்ட தகவல்கள் தனித்தனியே பட்டியலிடப்பட்டுள்ளன.
பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதோடு, நாட்டில் கொரோனா இரண்டாம் அலை நிலவரம் எத்தனை தீவிரமாக உள்ளது என்பதையும் இதன் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
அர்னவ் கோஸ்யான் (@arn4v ) உள்ளிட்ட தன்னார்வலர்கள் இந்த தளத்தின் பின்னே உள்ளனர்.