நடிகர் ஷம்மி கபூர் அனுப்பிய இமெயில்- எழுத்தாளர் இரா.முருகன் சிறப்பு பேட்டி
எழுத்தாளர் இரா.முருகன் தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர் மட்டும் அல்ல, இணையத்திலும் நல்ல பரிச்சியம் மிக்கவர். சிறுபத்திரிகைகள், வெகுஜன பத்திரிகைகள் இரண்டிலுமே எழுதியுள்ளவர், சிறுகதைகள், நாவல்கள் தவிர, அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த பத்திகள், கட்டுரைகளுக்காகவும் அறியப்படுகிறார். இணையத்தின் நுழைவு வாயிலாக யாஹு கொண்டாடப்பட்ட காலத்தில், ’ராயர் காபி கிளப்’ எனும் யாஹு மின்னஞ்சல் குழுவை இணைந்து நடத்தியவர்களில் ஒருவர். தமிழில் இணையம் சார்ந்த முன்னோடி முயற்சிகளில் இதுவும் ஒன்று. தொடர்ந்து துடிப்புடன் எழுதி வருபவர், விரைவில் வெளியாக இருக்கும் புதிய நாவலான ’ராமோஜி’யத்தின் பகுதிகளை, தனது இணையதளம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இணையம் மூலம் ரசிகர்களுடனான உரையாடலை தொடர்ந்து மேற்கொண்டு வருபவர், இந்த மின்மடலின் இணைய அனுபவ பேட்டி வரிசையில் இந்த வாரம் பங்கேற்கிறார்.
இரா.முருகனின் இந்த இ-மெயில் பேட்டியில், அவரது இணைய அனுபவத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடிவதோடு, பல்வேறு பயனுள்ள சுவாரஸ்யமான இணையதளங்களையும் அறிந்து கொள்ளலாம்.
கே: உங்களுக்கு முதலில் அறிமுகமான இணையதளம் நினைவில் இருக்கிறதா? அந்த தளம் தொடர்பான நினைவுகள்?
ப: அலுவலகத்தில் ( பணி சார்ந்த வங்கியின் மென்பொருள் துறை) அறிமுகமான சைபேஸ்.காம் (www.sybase.com தளம்) தளம் ((www.sap.com இப்போது) இப்போது ) எங்கள் குழு வடிவமைத்த முழு வங்கிக் கணிணியாக்கம் ((total branch automation) ) பணிக்கான அடிப்படை தகவல் பரப்பாக (data base) சைபேசைத்தேர்வு செய்த போது அவர்களின் இணையதளம் அறிமுகம் ஆனது. அமெரிக்காவில் சைபேஸ் அலுவலகத்திற்கே பயணம் போய் அங்கே தொழில்நுட்ப வல்லுனர்களோடு உரையாடிய மகிழ்ச்சி அந்த இணையதளத்தில் சஞ்சரித்த போது கிட்டியது.
மின்னஞ்சல் கணக்கு திறக்க 1990 களில் ஹாட்மெயில்.காம் தளத்துக்குப் போனேன். அலுவலக பணிக்கு வெளியே நான் சஞ்சரித்த முதல் இணையதளம் அது தான்.
மறைந்த பாலிவுட் நடிகர் ஷம்மி கபூரின் இணையதளம் தொழிலுக்கு வெளியே அடுத்து பரிச்சயமானது. ஷம்மி கபூரின் நட்பும் அப்போது கிடைத்தது. அவரிடம் இணையதளம் அமைப்பது பற்றி ஏதோ கேட்க, ஷம்மி எனக்கு அனுப்பிய முதல் மெயிலை திரும்பத் திரும்ப படித்தேன்.
2. உங்களை மிகவும் கவர்ந்த இணையதளங்கள்?
www.harithakam.com மலையாள இலக்கியம்
3. நீங்கள் அதிகம் பயன்படுத்தும் இணையதளங்கள்?
www.wikipedia.com ( விக்கிபீடியாவே சகலமும் என்றில்லாமல், விக்கியில் பார்த்துவிட்டு மற்ற தளங்களிலும் நோக்குவேன்.)
http://www.avalokitam.com/analyzer ( வெண்பா எழுதிவிட்டு யாப்பைச் சரி பார்க்க்).
தொழில் நிமித்தமாக, நீங்கள் சிறந்தது என கருதும் இணையதளங்கள்?
www.pmi.org (பிராஜக்ட் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிட்யூட் இணையதளம்)
www.kdp.amazon.com (மின் நூல் பதிப்பித்துக்கொள்ள இலவச சேவை).
5. பயனுள்ள இணையதளங்கள் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் எவை?
அ) எளிதாக சஞ்சரிக்க வசதி.
ஆ) கருத்து சொல்ல வசதி
இ) பாதுகாப்பு
ஈ) வாசிக்க எளிய எழுத்துக்கள்
உ) தகவல் பகுப்பு, தஜவல் பரிமாற்றம்.
6. மற்றவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் இணையதளங்கள்?
https://www.newyorker.com/contributors/haruki-murakami
(முரகாமி தவிர மற்றவர்களும் - https://www.newyorker.com/contributors)
www.eramurukan.in ( என் இணையதளம்)
7. எழுத்தாளர்களுக்கு சொந்த இணையதளம் எந்த அளவு அவசியமானது?
அவ்வளவு அவசியமானதல்ல என்பதே என் கருத்து. டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும், இணையதளத்தை விட வேகமாகத் தொடர்பு கொள்ள முடிகிறது.
நான் என் இணையதளத்தில், என் புது நாவலைக் கொஞ்சம் கொஞ்சமாக வாசகர்களுக்கு அந்த நாவலுடன் தொடர்பு ஏற்படுத்தித் தந்தேன். அங்கே படித்து விட்டு டிவிட்டரிலோ, கைப்பேசியிலோ கருத்து சொன்னவர்கள் அதிகம். அங்கேம் கருத்து சொல்ல ஏனோ கை வருவதில்லை.
8. தமிழில் உங்களை கவர்ந்த இணையதளம்?
தமிழ் இணையக் கல்வி கழகம் - www.tamilvu.org
9. நீங்கள் இணையதளங்களை எப்போது, எதற்கெல்லாம் பயன்படுத்துகிறீர்கள்?
நான் எழுதிய புனைவு, அபுனைவைப் பகிர்ந்து கொள்ள, ஒலி, ஒளி, எழுத்து மூலம் செய்தி பகிர்ந்து கொள்ள பெரும்பாலும் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறேன். (facebook, twitter, instagram)
எப்போது தேவை இருக்கிறதோ, அப்போதே பயன்படுத்துகிறேன்.
10. உங்களின் முன்னணி பத்து இணையதளங்கள் எவை?
6) https://ndl.iitkgp.ac.in/ National Digital Library of India
7) www.imdb.com
9) https://www.howstuffworks.com/
10) https://www.oed.com/ Oxford English Dictionary
துணை கேள்வி- உங்களை மிகவும் கவர்ந்த எழுத்தாளரின் இணையதளம்?
http://www.williamdalrymple.uk.com/ ( வில்லியம் டால்ரிம்பில்)
https://www.alexandermccallsmith.co.uk/ (அலெக்சாண்டர் மெக்கால் ஸ்மித்)
https://www.poetryfoundation.org/poets
முக்கியமாகக் கவிஞர் பிலிப் லார்கின்.
https://www.poetryfoundation.org/poets/philip-larkin)