உங்களுக்கான வார்த்தை விளையாட்டு தளம்
சுவாரஸ்யமான இணைய வார்த்தை விளையாட்டான வேர்ட்லேவை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தில் வைரலாக பரவி கவனத்தை ஈர்த்த இந்த விளையாட்டின் தாக்கத்தால் உருவான எண்ணற்ற நகல் விளையாட்டுகளையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
இந்த வரிசையில் இப்போது உங்களுக்கான வேர்ட்லே விளையாட்டை நீங்களே உருவாக்கி கொள்ள வழி செய்யும் இணையதளம் அறிமுகம் ஆகியிருக்கிறது.
டி.ஐ.ஒய்வேர்ட்லே (https://diywordle.com/# ) எனும் அந்த தளத்தில், நீங்கள் விரும்பும் வார்த்தை மற்றும் உங்கள் பெயரை சமர்பித்தால், அந்த வார்தையை வேர்ட்லே பாணி விளையாட்டாக மாற்றித்தருகிறது. இதற்கான இணைப்பை உங்கள் வேர்ட்லே விளையாட்டாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதே போல மற்றவர்கள் உருவாக்கும் வேர்ட்லே புதிரை விடுவிக்கலாம்.
வேர்ட்லேவின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த தளம் இன்னொரு உதாரணம்.