மின்பொருட்களுக்கான அங்காடி போல, மென்பொருட்களுக்கான அங்காடி எனும் வர்ணனையோடு அறிமுகம் ஆகிறது மெயின் - எலக்ட்ரானிக்ஸ் (https://www.main-electronics.com/ ) இணையதளம்.
இணையத்தில் பலவிதமான மென்பொருட்கள் இருப்பது தெரிந்தது தான். இந்த மென்பொருட்கள் எல்லாம் வெவ்வேறு இடங்களில் இருக்கின்றன. இத்தகைய மென்பொருட்களை எல்லாம் ஒரே இடத்தில் அணுக வழி செய்யும் நோக்கத்துடன் மேலே சொன்ன இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மென்பொருளையும் வெவ்வேறு கடைகளில் அணுக வேண்டியிருக்கும் நிலைக்கு மாறாக, ஒரு பொதுவான கடையில் அனைத்து மென்பொருட்களையும் அணுக சாத்தியமாவதே சிறந்தது எனும் குறிப்புடன் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் அணுக கூடிய மென்பொருட்களாக இப்போதைக்கு, இன்ஸ்டாகிராம், பிண்டிரெஸ்ட், ஸ்லேக், டிவிட்ச், பேபால், ஆசனா போன்ற மிக பிரலமான மென்பொருட்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டிருந்தாலும், இதன் நோக்கம் அருமையாக இருக்கிறது.
இணையத்தில் உள்ள முக்கிய மென்பொருட்களை எல்லாம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் இந்த தளம் வளர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஸ்மார்ட்போன்களுக்கான செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் பிரிந்து கிடக்கின்றன. இதற்கு மாறாக, செயலிகளை சுதந்திரமாக அணுக வழி ஏற்பட வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த தளத்தின் நோக்கம் ஏற்புடையதாக இருக்கும்.
இதில் உள்ள மென்பொருள் ஐக்கான் எதுவும் திறக்க இயலவில்லை