சிறந்த கட்டுரைகளை வாசிப்பதற்கான இணையதளம்
சமூக ஊடக பதிவுகளை பார்த்தபடி நேரத்தை வீணடிப்பதைவிட, இணையத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கட்டுரைகளை படிக்க விரும்பினால், ரீட் சம்திங் கிரேட் (https://www.readsomethinggreat.com/ ) இணையதளம் ஈர்ப்புடையதாக இருக்கும்.
திரட்டி வகையைச்சேர்ந்த இந்த தளம், இணையத்தில் வெளியாகும் மிகச்சிறந்த கட்டுரைகளை தொகுத்தளிக்கிறது. இந்த தொகுப்பும் மிகையாகாமல் மிதமாக இருக்கும் வகையில், ஒரு நேரத்தில் ஐந்து கட்டுரைகளை மட்டும் தேர்வு செய்து பரிந்துரைக்கிறது.
கட்டுரை தலைப்பு, அதன் வகை மற்றும் அதன் ஆரம்ப பத்தி ஆகியவை மட்டும் இடம்பெறுகின்றன. கட்டுரையை வாசிப்பதற்கு தேவைப்படக்கூடிய நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரும்பிய கட்டுரையை தேர்வு செய்து வாசிக்கலாம். பரிந்துரைக்கப்படும் ஐந்து கட்டுரைகள் தவிர வேறு கட்டுரைகள் தேவை எனில், என் வாசிப்பை மாற்றவும் ( ) எனும் பட்டனை கிளிக் செய்தால், வேறு ஐந்து கட்டுரைகள் தோன்றுகின்றன. இப்படி ஐந்து ஐந்து கட்டுரைகளாக மாற்றிக்கொண்டே இருக்கலாம்.
சுவாரஸ்யமான , நேர்த்தியான, ஆழமான கட்டுரைகள் இணையத்தின் அடி ஆழத்தில் இருந்து தேடி எடுக்கப்பட்டு முன்வைக்கிறது. இந்த தேர்வின் அருமையை நீங்களே உணரலாம். வலைப்பதிவுகளில் இருந்தும் சிறந்த கட்டுரைகள் முன்வைக்கப்படுகிறது.
பயனாளிகளும் தங்களை கவர்ந்த கட்டுரையை பரிந்துரைக்கலாம்.
நான் பார்த்த அளவில், கொரோனா வைரஸை அறிவியல் ஆய்வுலகம் எதிர்கொண்ட விதம் தொடர்பான அட்லாண்டிக் இதழின் கட்டுரை அருமை. - https://www.theatlantic.com/magazine/archive/2021/01/science-covid-19-manhattan-project/617262/