இணைய மலர்

Share this post
உக்ரைன் போர் - பிராண்ட்கள் நிலைப்பாட்டை அறிய உதவும் இணையதளம்
cybersimman.substack.com

உக்ரைன் போர் - பிராண்ட்கள் நிலைப்பாட்டை அறிய உதவும் இணையதளம்

cybersimman
Mar 13
Share this post
உக்ரைன் போர் - பிராண்ட்கள் நிலைப்பாட்டை அறிய உதவும் இணையதளம்
cybersimman.substack.com

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு பிராண்ட்கள் ரஷ்யாவில் தங்கள் செயல்பாட்டை நிறுத்தி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

போரை நிறுத்த பொதுமக்கள் குரல் கொடுப்பது போலவே, வர்த்தக நிறுவனங்கள் தங்களால் முடிந்த அழுத்தத்தை அளிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை புரிந்து கொள்ளலாம். அல்லது இவை, மேற்கத்திய ஆதரவு நடவடிக்கை அல்லது இன்னும் மோசமாக மார்க்கெட்டிங் உத்தி என்றும் கூட பலரும் கருதலாம்.

இந்த விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும், உக்ரைன் நெருக்கடியில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக ரஷ்யாவில் இருந்து எந்த நிறுவனங்கள் எல்லாம் விலகி கொண்டுள்ளன என்பதை தெரிந்து கொள்வதற்காக என்றே, பிராண்ட்ஸ் இன் ரஷ்யா (https://www.brandsinrussia.com/) இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தளம், ரஷ்யாவில் செயல்பாடுகளை நிறுத்துக்கொண்டுள்ள பிராண்ட்களை பட்டியலிட்டுள்ளதோடு, இன்னமும் செயல்பட்டு வரும் பிராண்ட்களையும் பட்டிய

லிட்டுள்ளது. உங்கள் அபிமான பிராண்ட்கள் இந்த பட்டியலில் உள்ளதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, வாடிக்கையாளர்களாகிய நீங்கள் இது தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த பிராண்டுகளுக்கு டிவிட்டர் மூலம் தெரிவிப்பதற்காக வழி செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் போர் தொடர்பாக நிறுவனங்களை நிலைப்பாடு எடுக்கத்தூண்டும் இணையதளமாகவும் இதை கருதலாம். உக்ரைன் போர் சூழலில் நிறுவன நிலைப்பாடு தொடர்பாக தகவல் அளிக்கும் தளமாகவும் கருதலாம்.

Share this post
உக்ரைன் போர் - பிராண்ட்கள் நிலைப்பாட்டை அறிய உதவும் இணையதளம்
cybersimman.substack.com
Comments

Create your profile

0 subscriptions will be displayed on your profile (edit)

Skip for now

Only paid subscribers can comment on this post

Already a paid subscriber? Sign in

Check your email

For your security, we need to re-authenticate you.

Click the link we sent to , or click here to sign in.

TopNewCommunity

No posts

Ready for more?

© 2022 cybersimman
Privacy ∙ Terms ∙ Collection notice
Publish on Substack Get the app
Substack is the home for great writing