உங்கள் பிறந்த நாளுக்கான இணையதளம்
உங்கள் பிறந்த நாள் அன்று என்ன எல்லாம் நடந்தன என்பதை தெரிந்து கொள்ள விருப்பமா? என்று கேட்டால் எவருக்குமே ஆர்வமாக தானே இருக்கும். இந்த ஆர்வத்தை அடிப்படையாக கொண்டு, ’பர்த்டே.விக்கி’ (https://birthday.wiki/ ) இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தளம், ஒவ்வொரு நாளும் உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகளை முகப்பு பக்கத்தில் பட்டியலிடுகிறது. இதழியல் உலகில் பிரபலமாக பயன்படுத்தப்படும் ஆவண உத்தியான, இன்றைய தினத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளை பட்டியலிடுவதை ஒரு புத்திசாலித்தனமான சின்ன திருப்பத்துடன் இந்த தளம் பயன்படுத்துகிறது.
வரலாற்றில் இன்று எனும் பொருளில் அல்லாமல், உங்கள் பிறந்த நாளில்’ நடந்தவை எனும் பொருளில் முக்கிய நிகழ்வுகளை பட்டியலிடுகிறது.
ஒவ்வொரு நிகழ்வும் புகைப்படத்துடன், சிலவரிகளில் இடம்பெறுகிறது. வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை தெரிந்து கொள்ள சுவார்ஸ்யமான வழி.
கடந்த நாட்களின் நிகழ்வுகளையும் நாட்காட்டி வடிவில் பார்க்கலாம். எதிர்கால நிகழ்வுகளையும் (!) பார்க்கலாம்.
தளத்தை உருவாக்கிவர் அல்லது இதன் நோக்கம் பற்றிய விவரம் இல்லை. ஆனால் சுவாரஸ்யமான தளமாக இருக்கிறது.