வேர்ட்லே விளையாட்டில் தொடரும் புதுமை!
வேர்ட்லே விளையாட்டின் தாக்கத்தில் உருவான இன்னொரு உருமாறிய விளையாட்டு அறிமுகம் ஆகியிருக்கிறது. வேப்லே (https://wafflegame.net/ ) எனும் அந்த விளையாட்டு பற்றி லைப்ஹேக்கர் தளம் அருமையான அறிமுகத்தை எழுதியிருக்கிறது. – https://lifehacker.com/waffle-is-the-new-wordle-1848793653
வேர்ட்லே விளையாட்டு பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த இணைய வார்த்தை விளையாட்டில் ஐந்து எழுத்து வார்த்தையை ஊகிக்க வேண்டும். இந்த ஊகித்தலுக்கு அளிக்கப்படும் குறிப்புகளும், அவற்றை பயன்படுத்துவதில் உள்ள வரம்புமே வேர்ட்லே விளையாட்டை சுவாரஸ்யம் மிக்கதாக்குகிறது.
வேர்ட்லே இணையத்தில் வைரலாகி பிரபலமானதோடு மட்டும் அல்லாமல், இதே போலவே புதிய விளையாட்டுகள் உருவாக்கப்படுவதற்கான ஊக்கமாகவும் அமைந்துள்ளது. வேர்ட்லேவின் அடிப்படையான அம்சங்களில் சின்ன சின்ன மாறுதல்களோடு உருவாகும் இந்த விளையாட்டுகள் வரிசையில் இப்போது வேப்லே அறிமுகம் ஆகியுள்ளது.
வேர்ட்லே தாக்கத்தால் உருவான விளையாட்டுகளில் அதன் அடிப்படை அம்சங்களில் இருந்து பெருமளவு விலகிய விளையாட்டாக வேப்லே அமைந்திருப்பதாக லைப்ஹேக்கர் குறிப்பிடுகிறது.
வேப்லேவில், எந்த எழுத்தையும் புதிதாக ஊகிக்க வேண்டாம். எல்லாம் எழுத்துகளும் ஏற்கனவே கட்டங்களில் உள்ளன- ஆனால் இடம் மாறி அமைந்துள்ளன. அந்த எழுத்துகளை சரியான கட்டத்திற்கு மாற்றி அமைத்து சரியான வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். கட்டங்களில் ஆறு இடங்களில் இருந்து வார்த்தகளை கண்டுபிடிக்க வேண்டும்.
கிட்டத்தக்க குறுக்கெழுத்து புதிர் போல, ஆனால், கியூப் விளையாட்டின் தன்மையில் எழுத்துகளை அங்கும் இங்கும் மாற்றிக்கொண்டிருக்கலாம். அதிக பட்சம் 15 முறை எழுத்துகளை இடம் மாற்றலாம். குறைந்தபட்சம் 10 மாற்றங்களில் வார்த்தையை கண்டுபிடித்துவிட்டால் வெற்றி என பொருள். அதற்கு மேல் நகர்வுகளை எடுத்துக்கொண்டால், எஞ்சியிருக்கும் நகர்வுகள் நட்சத்திர புள்ளிகளாக அளிக்கப்படும். உதாரணம் 3 அல்லது 2 நட்சத்திரங்கள்.
எழுத்துகளை நகருக்கும் போது வேர்ட்லே விளையாட்டு போலவே, நகர்வுக்கான வண்ணம் மஞ்சள் அல்லது பச்சையாக தோன்றுகிறது. பச்சை எனில் சரியான நகர்வு என பொருள். மஞ்சள் எனில் எழுத்து வேறிடத்தில் வர வேண்டும் என பொருள். மஞ்சள் வண்ணம் தோன்றும் போது தான் மனதில் குழப்பமும் தோன்றும்.
வேர்ட்லே போலவே புள்ளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.
வேப்லே விளையாட்டின் டிவிட்டர் பக்கம் : https://twitter.com/thatwafflegame