குறும்படங்களுக்கான புதிய இணையதளம்.
இண்டி-கிலிப்ஸ் (https://indie-clips.com/ ) குறும்படங்களுக்கான ஆகச்சிறந்த தளம் என்று சொல்வதற்கில்லை. ஆனால், குறும்படங்களுக்காக என்று அறிமுகம் ஆகியிருக்கும் புதிய தளம்.
குறும்படம் களஞ்சியம் என்று சொல்லும் அளவுக்கு குறும்படங்களின் பரந்து விரிந்த பட்டியலை இந்த தளம் கொண்டிருக்கவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய என்று சொல்லும் அளவுக்கான குறும்படங்கள் தான் இந்த தளத்தில் உள்ளன. ஆனால், இதுவே இந்த தளத்தின் சாதகமான அம்சமாகவும் அமைகிறது. ஏனெனில், மிக எளிதாக இந்த தளத்தின் உள்ளடக்கத்தை அலசி ஆராய்ந்து தளத்தின் தன்மையை புரிந்து கொள்ளலாம்.
இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் குறும்படங்கள் முன்னிறுத்தப்படுவதோடு, குறும்படங்கள் தனியேவும் பட்டியலிடப்பட்டுள்ளன. அடிப்படையில் ஸ்டிரீமிங் சேவையாக துவங்கிய தளம் என்பதால், இந்த தளத்திலேயே குறும்படங்களை பார்க்கலாம். குறும்படங்களின் கதை, இயக்குனர் குறிப்பு ஆகிய தகவல்களையும் காணலாம்.
குறும்படங்களை பார்க்கலாம் என்பதோடு, வெப் சீரிஸ் எனப்படும் இணைய தொடர்களுக்கான தனிப்பகுதியும் இருக்கிறது. இவைத்தவிர, குறும்பட இயக்குனர்களுடான நேர்காணல்களும் இடம்பெறுகின்றன.
இந்த தளத்தின் சிறப்பம்சம் குறும்படங்களில் கவனம் செலுத்துவது மட்டும் அல்ல, சுயேட்சை இயக்குனர்களின் குறும்படங்களில் கவனம் செலுத்துவது தான். அந்த வகையில், குறும்படங்களுக்கான பட விழாவையும் நடத்தி விருந்து வழங்குகிறது இந்த தளம்.
குறும்பட இயக்குனர்கள் தங்கள் படங்களை சமர்பித்து, ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வழி செய்யும் மேடையாக உருவாகும் நோக்கத்தை கொண்டுள்ளதாக இந்த தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-