இணைய மலர் – மின்னஞ்சலில் தேடி வரும் இணைய அற்புதங்கள்
ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வெளியாகி கொண்டிருக்கும் இணைய மின்மடல் சேவை இணைய மலர். செய்தி மடல் சேவையில் உலக அளவில் முன்னணில் விளங்கும் சப்ஸ்டேக்கில் வெளியாகும் துடிப்பான தமிழ் செய்தி மடல்.
நோக்கம்: புதிய பயனுள்ள இணையதளங்களையும், செயலிகளையும், இன்னும் பிற இணைய சேவைகளையும் அறிமுகம் செய்வது. புதிய எனும் போது, ஏற்கனவே உள்ள அறியப்படாத இணையதளங்களையும் குறிக்கும். வழக்கமான தேடலில் கண்ணில் பட வாய்ப்பில்லாத தளங்களையும் குறிக்கும்,
தனித்தன்மை: இணையதளங்கள், செயலிகள் தொடர்பான விரிவான அறிமுகம். மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டவை. பெரும்பாலும் வணிக நோக்கிலான தளங்களை தவிர்த்து, புதுமையும், பயன்பாடும், பொதுநலனும் சார்ந்த தளங்களின் அறிமுகம்.
வகைகள்: கற்றலுக்கு உதவும் தளங்களில் துவங்கி, இணைய வரலாறு, தொழில்நுட்பம், இலக்கியம், புத்தக வாசிப்பு, இசை, திரைப்படம், மென்பொருள், சமூக ஊடகம், இணைய செயல்பாடு என பல்வேறு பிரிவுளைச் சேர்ந்த இணையதளங்களும், செயலிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
வார பதிப்பு: ஆரம்ப ஆண்டுகளில் தினந்தோறும் ஒரு பதிவு வெளியாகி கொண்டிருந்தது. அண்மை மாதங்களில், மாற்றத்தின் தேவையை முன்னிட்டு அவ்வபோது பதிவுகள் வெளியாகின்றன. கூடுதல் அம்சங்களோடு, அனலாக் பத்திரிகையின் தன்மையோடு, வார பதிப்பாக வெளியிடும் திட்டம் இருக்கிறது. தொடர் பதிவுகளோடு, வாராந்திர சிறப்பு பதிப்பை எதிர்பார்க்கலாம். தமிழ் மற்றும் இந்திய தளங்களிலும் தனி கவனம் செலுத்த விருப்பம்.
என்ன பயன்? இன்ஸ்டாவிலும், பேஸ்புக்கிலும் ஏன் கூகுள் தேடலிலும் கூட கண்ணில் பட வாய்ப்பில்லாத சுவாரஸ்யமான பயனுள்ள இணைய சேவைகளை உங்கள் மின்னஞ்சல் தேடி வரச்செய்கிறது.
உங்கள் கருத்து: இந்த மின்மடல் தொடர்பான உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். நீங்கள் எதிர்பார்க்கும் தளங்களை கோருவதோடு, நல்ல தளங்களையும் பரிந்துரைக்கலாம். இந்த சேவை பயனுள்ளது என கருதினால் இதை உங்கள் நட்பு வட்டத்தில் பகிரவும், பரிந்துரைக்கவும்.
