ஒரு ’ MB’-ல் உங்களுக்கான இணையம்.
நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே இருக்கும் இணையத்தை உங்களுக
்காக சுருக்கித்தந்தால் எப்படி இருக்கும்?
வெப்தட்.இயோ (https://www.webthat.io/) இணையதளம் இதை தான் செய்கிறது.
கல்லூரி மாணவர் ஒருவர் பகுதி நேர கற்றல் முயற்சியாக உருவாக்கியுள்ள இந்த இணையதளம், இணையத்தின் முக்கியமான இணையதளங்களை பல்வேறு தலைப்புகளில் ஒரே பக்கத்தில் இணைப்புகளுடன் பட்டியலிட்டுள்ளது.
கிளவுட் சேமிப்பு, வெப் ஹோஸ்டிங், ஆப் உருவாக்கம், கிர்ப்டோ சந்தைகள், இ-காமர்ஸ், தானியங்கிமயமாக்கம், பொழுதுபோக்கு உள்ளிட்ட தலைப்புகளில், இணையதளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. முழுமையான தொகுப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், இந்த பட்டியலில் உள்ள தலைப்புகளில் ஆர்வம் கொண்டவர்களுக்கு, இந்த தளங்களை பார்த்தால் போதும் என நினைக்க வைக்கும் அளவுக்கு பயனுள்ள பட்டியலாக இருக்கிறது.
அந்த காலத்தில் பிரபலமாக இருந்த யாஹு இணைய கையேடு பாணியில் ஒற்றை பக்கத்தில் அமைந்துள்ள இந்த தளம், உங்களுக்காக இணையத்தை சுருக்கி ஒரு MB யில் அளிக்கிறது.