உங்களுக்கான புதிய வீடியோ பிளேயர்
இணையத்தில் எல்லாமே எளிதாக இருக்க வேண்டும். ஆடியோவை கேட்பதோ, வீடியோவை பார்ப்பதோ, அதன் முகவரியை இழுத்து வந்து கம்ப்யூட்டரில் வைத்து விட்டால் போதும் என இருக்க வேண்டும். வீடியோவை கிளிக் செய்து பிளே செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்க கூடாது.
இத்தகைய எளிமையான அம்சம் கொண்ட இணைய வீடியோ பிளேயர் பிண்டோவெப்பிளேயர் (https://www.pintowebplayer.com/ ) எனும் பெயரில் அறிமுகம் ஆகியிருக்கிறது. இந்த பிளேயரை டவுண்லோடு செய்து கொண்டால் போதும் அதன் பிறகு, இணைய வீடியோக்களை எளிதாக பார்த்து ரசிக்கலாம்.
இப்போது இருக்கும் இணை பிளேயர்களிலேயே இது சாத்தியம் ஆகிறதே என நீங்கள் நினைக்கலாம். அதோடு, பிரவுசரிலேயே வீடியோக்களை பார்க்கும் வசதி இருக்கிறதே என நினைக்கலாம். ஆனால், பிண்டோபிளேயரில் என்ன சிறப்ப என்றால், இதன் கிளின் அண்ட் டிரேக் வழி முறை தான்.
இணையத்தில் உலாவும் போது எந்த தளத்தில் வீடியோவை எதிர்கொண்டாலும் சரி அதை தனியே பிளே செய்ய வேண்டாம். அந்த வீடியோவின் இணைய முகவரியை மட்டும் இந்த பிளேயரில் இழுத்து போட்டால் போதும், வீடியோ ஒளிபரப்பாகத்துவங்கிவிடும். அப்படியே அந்த வீடியோவை டவுண்லோடும் செய்து கொள்வதால், இணைய இணைப்பு இல்லாமலும் பின்னர் பார்க்கலாம்.
இந்த வெப் பிளேயர் வசதி புதிதா அல்லது வழக்கமானதா எனத்தெரியவில்லை. ஆனால், இந்த பிளேயரில் இடம்பெறும் வீடியோக்களை எல்லாம் அழகாக அடுக்கி வைத்து பராமரிக்கிறது. உண்மையிலேயே பார்த்தால் வீடியோக்களுக்கான அலமாரி போல இருக்கிறது. இதில் இருந்து வீடியோவை தேர்ந்தெடுத்து பார்ப்பது வெகு சுலபம் எனத்தோன்றுகிறது.
வழக்கமான பிளேயரில் இருந்து இந்த சேவை எந்த அளவு மாறுபட்டிருக்கிறது என பயன்படுத்தி பார்த்து சொல்லுங்கள். சேவை நன்றாக இருந்தால், கிருஷ்ண காந்த் சர்மாவுக்கு பாராட்டு சொல்லுங்கள் அவர் தான் (@kksharma1618 ) இந்த சேவையை உருவாக்கியுள்ளார். இலவச மற்றும் கட்டண சேவைகள் இரண்டும் உள்ளன.