தொழில்நுட்ப பிரியர்களுக்கான பேஸ்புக்!
சிறியது அழகு (small is beautiful ) என்று சொல்லப்படுவது போல, சமூக வலைப்பின்னல் தளங்களிலும் சிறியது அழகானது. அதாவது பரந்து விரிந்த வலைப்பின்னல் சேவையை விட, குறிப்பிட்ட நோக்கிலான சமூக வலைப்பின்னல் சேவையே அதிக பலன் அளிக்க கூடியது. அந்த வகையில், தொழில்நுட்ப பிரியர்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவை அறிமுகம் ஆகியிருக்கிறது.
மிகவும் பொருத்தமாக ஹியூமன்ஸ் இன் டெக் ( https://www.humansintech.io/) எனும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை, தொழில்நுட்ப வல்லுனர்களும், ஆர்வலர்களும் தங்களுக்கு இடையிலான வலைப்பின்னலை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இந்த தொடர்பையும் மிக இயல்பாக வழக்கமான உரையாடல்கள் மூலம் மேற்கொள்ளலாம் என இந்த தளம் தெரிவிக்கிறது.
இதில் தொழில்நுட்ப ஆர்வலர்கள் தங்கள் ஆர்வத்திற்கு ஏற்ற வல்லுனர்களை கண்டறிந்து தொடர்பு கொள்ளலாம். அவர்களுடன் நேரடி அரட்டை பாணியில் உரையாடலாம். இப்படி இணைந்துள்ளவர்கள் சார்ந்துள்ள குழுக்களை பரஸ்பர ஆர்வம் அடிப்படையில் கண்டறிந்து இணையலாம்.
ஏதேனும் சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால் தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கேட்டு ஆலோசனை பெறலாம். இது வழிகாட்டுதலுக்கு உதவுவதோடு, தொழில்நுட்பம் சார்ந்த உரையாடலுக்கும் வழிவகுக்கும்.
பேஸ்புக் வீச்சு மிகுந்த வலைப்பின்னல் சேவை தான் என்றாலும், அங்கு கூட்டம் மிக மிக அதிகம் என்பதோடு, சர்ச்சைகளும், சச்சரவுகளும் அதிகம். சர்ச்சை நிறுவனம் தொடர்பானது என்றால் சச்சரவுகளை உறுப்பினர்கள் பங்களிப்பு.
எனவே, குறிப்பிட்ட துறை சார்ந்த வலைப்பின்னல் சேவை அவசியமானது. இதை பூர்த்தி செய்ய முயலும் ஹியூமன்ஸ் இன் டெக் சேவையை பயன்படுத்திப்பார்க்கவும், அல்லது தொழில்நுட்ப புலிகளாக இருக்கும் நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும்.
செயலி வடிவிலும், இணையதளத்திலும் இந்த சேவையை அணுகலாம்.